ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.28ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.28ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.;

Update: 2025-04-27 11:10 GMT

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.28ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சூரியம்பாளையம், சென்னம்பட்டி துணை மின் நிலையங்கள் மற்றும் ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலைய மூன்ரோடு மின் பாதையில் நாளை (ஏப்ரல் 28ம் தேதி) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சித்தோடு, ராயபாளையம், ஈரோடு சுண்ணாம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவிரிநகர். பாலாஜிநகர், எஸ்.எஸ்.டி. நகர், வேலன்நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர், சேவாக்கவுண்டனூர்.

அம்மாபேட்டை சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சென்னம்பட்டி, முரளி, கொமராயனூர், தொட்டிக்கிணறு, சனிச்சந்தை, கிட்டம்பட்டி, புதூர்.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலைய மூன்ரோடு மின் பாதை (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- மூன்ரோடு, இருசானூர், மைலம்பாடி, ஏம்பாளையம், வரதநல்லூர், மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி மற்றும் கூலிக்காரன்பாளையம்.

Similar News