ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.,29ம்‌ தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 29ம் தேதி) செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.;

Update: 2025-04-28 00:50 GMT

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 29ம் தேதி) செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வில்லரசம்பட்டி துணை மின் நிலைய மின் பாதை மற்றும் சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (ஏப்ரல் 29ம் தேதி) நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்லரசம்பட்டி துணை மின் நிலைய கருவில்பாறைவலசு மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ஈரோடு ஒண்டிக்காரன்பாளையம், இந்திராநகர், சானார்பாளையம், சன்கார்டன், ஐஸ்வர்யாபார்க், சத்யாநகர், கிரீன்சிட்டி பாய்ஸ் கார்டன், தொட்டம்பட்டி, கவுரிசங்கர்மில் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் குடோன்.

அம்மாபேட்டை சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ரெட்டிபாளையம், மலையம்பறைகாடு, விராலிகாட்டூர், மூலையூர், சென்றாயனூர், குரும்பனூர்காடு மற்றும் வெள்ளக்கரட்டூர்.

Similar News