ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.20) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.20) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-05-18 21:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.20) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி மற்றும் சிப்காட் II துணை மின் நிலையங்களில் நாளை (மே.20) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகிரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விளாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில, தொப்பபாளையம், பெரும்பரப்பு, நம்மகவுண்டன்பாளையம், அஞ்சூர், வாழை தோட்டம், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், குருக்குவலசு, வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு, வள்ளிபுரம், இச்சிபாளையம், ஒத்தக்கடை, வடக்கு காரட்டுபுதுார், தெற்கு புதுப்பாளையம், கரட்டாம்பாளையம், பெருமாள்கோவில்புதுார் மற்றும் கல்வெட்டுப்பாளையம்

சிப்காட் II துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம் மற்றும் காசிபில்லாம்பாளையம்.

Similar News