ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.24) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.24) செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.24) செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (டிச.24) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என பவானி கோட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சென்னம்பட்டி, கண்ணாமூச்சி, கொமராயனூர், கிட்டம்பட்டி, முரளிபுதூர், தொட்டிக்கிணறு, வெள்ளக்கரட்டூர், சனிசந்தை, விராலிக்காடு, குருவரெட்டியூர், ஆலமரத்துதோட்டம், பொரவிபாளையம், ரெட்டிபாளையம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம் மற்றும் ஜி.ஜி.நகர் ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.