ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.,7) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.,7) சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-12-06 01:15 GMT

நாளை மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.,7) சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கஸ்பாபேட்டை மற்றும் பவானிசாகர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (டிச.,7) சனிக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டி நாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், முத்துசாமி காலனி, குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம், எல்.ஐ.சி.நகர், ரைஸ்மில் ரோடு, ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர். இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மாருதி கார்டன், மூலப்பாளையம், சின்ன செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதி நாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான் வலசு.

பவானிசாகர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பவானிசாகர், கொத்தமங்கலம், வெங்கநாயக்கன்பாளையம், கணபதி நகர், சாத்திரக் கோம்பை, ராமபையலூர், புதுப்பீர்கடவு, பண்ணாரி, ராஜன்நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்டமாளம், ரெட்டவூர் மற்றும் வகுத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News