ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.12) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.12) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.12) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் மற்றும் சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.12) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபி கொளப்பலூர் துணை மின் நிலையம்:-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- காமராஜ்நகர், யூனிட்டி நகர், செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர், அங்கம்பாளையம், சானார்பாளையம், லிங்கப்பகவுண்டன்புதூர், போக்குவரத்து நகர், குமரன் காலனி, அம்மன் கோவில் பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி மற்றும் சொக்குமாரிபாளையம்.
சத்தியமங்கலம் வரதம்பாளையம் துணை மின் நிலையம்:-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- வடக்குப்பேட்டை, புளியம்கோம்பை, சந்தைக் கடை, மணிக்கூட்டு, கடை வீதி, பெரியகுளம், பாசக் குட்டை, வரதம்பாளையம், ஜேஜே நகர், கோம்புப்பள்ளம், கோட்டுவீராம்பாளையம் மற்றும் கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.