பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 9,300 கன அடி
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 40-வது நாளாக 102 அடியில் நீடித்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (13.09.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 102.00 அடி ,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 9,300 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 9,300 கன அடி ,
பவானி ஆற்றில் 7,150 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1,750 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 400 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.