ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்: மாநகராட்சி ஆணையாளர் தகவல்!
ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் பொதுமக்களின் வருகையை அதிகரிக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.;
ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் பொதுமக்களின் வருகையை அதிகரிக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தனலட்சுமி கூறியதாவது, கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் ஜவுளி கடைகள் மட்டுமின்றி அனைத்து வகையான வணிக நிறுவனங்களையும் அமைத்துக் கொள்ள மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
எனவே உணவகங்கள், ஸ்டேசனரி பொருட்கள் விற்பனையகம், அழகு நிலையங்கள் போன்ற பல்நோக்கு திட்டத்துடன் வணிக வளாகத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
பல்வேறு நவீன வசதிகளுடன் வணிக வளாகம் கட்டப் பட்டு உள்ளதால், பொதுமக்களின் வருகை அதிகரிக்க புதிதாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. வணிக வளாகத்தில் உள்ள திறந்தவெளி பகுதியில் விடுமுறை நாட்களில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.