சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ரூ.3.39 லட்சம் கையாடல் செய்த தலைமை எழுத்தர் கைது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ரூ.3.39 லட்சம் கையாடல் செய்த தலைமை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.;
ஞானப்பிரகாஷ்.
சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ரூ.3.39 லட்சம் கையாடல் செய்த தலைமை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு அவ்வையார் வீதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 38). சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நீதிமன்றத்தில் வசூலிக்கப்படும் அபராத தொகை, வைப்புத்தொகை, குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட தொகை மற்றும் பல்வேறு குற்றங்களுக்கு வசூலிக்கப்பட்ட தொகை என ரூ.3 லட்சத்து 39 ஆயிரத்து 170-யை அரசு கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உமாதேவி சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஞானப்பிரகாசத்தை கைது செய்தனர்.