மாநில அளவிலான கொங்கு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

மாநில அளவிலான கொங்கு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று (ஜன.8) நடைபெற்றது.;

Update: 2025-01-08 14:30 GMT

மாநில அளவிலான கொங்கு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சாம்பியன் பட்டங்கள் வழங்கப்பட்டன.

மாநில அளவிலான கொங்கு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று (ஜன.8) நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில், மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கொங்கு விளையாட்டுப் போட்டி இன்று (ஜன.8) நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்களுக்கு இடையே கபாடி, கைப்பந்து, ஐவர் கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.


தொடர்ந்து, ஒன்பதாவது ஆண்டாக நடத்தப்படும் இப்போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பள்ளிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுடன் 50க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர். இப்போட்டிகள் 30க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் ஆடுகள மேற்பார்வையாளர்கள் பங்களிப்புடன் அனைத்து போட்டிகளும் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளின் தொடக்க விழா ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் பி.டி. தங்கவேல், முதல்வர் ஹெச்.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.


இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு, கொங்கு நேஷ்னல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா தலைமை வகித்தார். கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் பி.டி.தங்கவேல், முதல்வர் ஹெச்.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்து ஆண்கள் பிரிவில் வடுகப்பட்டி ராஜேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு சி.எஸ். அகாடமி, திருச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் பாலபவன் குளோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணிகள் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.


கால்பந்து பெண்கள் பிரிவில் நாமக்கல் அரசு விளையாட்டு விடுதி, ஈரோடு அரசு விளையாட்டு விடுதி, ஈரோடு எம்.ஆர்.ஜி.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு சி.எஸ். அகாடமி அணியும், கைப்பந்து ஆண்கள் பிரிவில் திருச்சி அரசு விளையாட்டு விடுதி, சென்னை டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, சென்னை செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி, திண்டல் பாரதி வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி அணியும் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.

அதேபோல், கைப்பந்து பெண்கள் பிரிவில் ஈரோடு அரசு விளையாட்டு விடுதி, கடலூர் செயின்ட் அன்னீஷ் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, சென்னை அரசினர் மேல்நிலைப்பள்ளி அணியும், கபாடிப் போட்டி ஆண்கள் பிரிவில் தளவாயாபுரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி, வாழப்பாடி கலைமகள் வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி, ஊஞ்சலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கருங்கல்பாளையம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளி அணியும் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.

தொடர்ந்து, நடைபெற்ற விழாவில், ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரியும் தேசிய கபாடி மற்றும் இறகுப் பந்தாட்ட வீரருமான சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகளாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பணப்பரிசாக இரண்டு லட்சம் ரூபாயுடன் கொங்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.


இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குநர் கே.எம்.பிரகாஷ்ராஜ் மற்றும் உதவி உடற்கல்வி இயக்குநர் ஆர்.ஜெகதீஸ்வரி ஆகியோர் தலைமையிலான பேராசிரியர் குழு தன்னார்வல மாணவர்களின் பங்களிப்புடன் போட்டிகளில் மாணவ, மாணவியர் புத்துணர்ச்சியுடன் பங்கேற்கும் வகையில் உணவு, தங்குமிடம், மருத்துவ முதலுதவி மற்றும் போக்குவரத்து என அனைத்து வசதிகளையும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News