ஈரோடு: தனியார் நிறுவனங்களில் திருக்குறள் விளக்க உரை எழுத வேண்டும்; தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் உத்தரவு!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் திருக்குறள் விளக்க உரை எழுத வேண்டும் என்று தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.;
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் திருக்குறள் விளக்க உரை எழுத வேண்டும் என்று தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் நிறுவனங்களில் திருக்குறளும், விளக்க உரையும் எழுத உத்தரவிட்டார்.
அதன்படி, ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் பா.மாதவனின் அறிவுரைபடி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் தமிழில் திருக்குறளும், விளக்க உரையும் எழுதப்பட வேண்டும்.
தினம் ஒரு திருக்குறள் என்ற அடிப்படையில் பொருள் விளக்கத்துடன் படித்து பயன்பெறும் வகையில் அனைத்து தொழிலாளர்களும் அறியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும். மேலும் வேலை அளிப்போர் அமைப்புகளிடமும், தொழில் நிறுவனங்களிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்த தகவலை ஈரோடு தொழிலாளர்துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.