ஈரோட்டில் 8வது தேசிய சித்த மருத்துவ தின விழா
8வது தேசிய சித்த மருத்துவ தின விழா ஈரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று (டிச.17) நடைபெற்றது.
8வது தேசிய சித்த மருத்துவ தின விழா ஈரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
தமிழக அரசு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை உடன் ஈரோடு வழக்கறிஞர் சங்கங்கள் இணைந்து நடத்திய 8-வது தேசிய சித்த மருத்துவ தின விழா ஈரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. உதவி மருத்துவ அலுவலர் ஆர்.கண்ணன் வரவேற்றார். முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பி.முருகேசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பி.பொற்கொடி, பார் அசோசியேஷன் தலைவர் எஸ்.குருசாமி, செயலாளர் ராஜா, பொருளாளர் தங்கமுத்து, தி அட்வகேட் அசோசியேசன் தலைவர் பி.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி மருத்துவ அலுவலர்கள் எஸ்.கண்ணுசாமி, எஸ்.ரம்யா ஆகியோர் உரையாற்றினர். விழாவில் மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சியை மாண்பை நீதிபதி பி.முருகேசன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளை உதவி மருத்து அலுவலர்கள் வெங்கடாசலம், லெனின் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முகாம் முடிவில் உதவி மருத்து அலுவலர் கே.சங்கரலிங்கம் நன்றி கூறினார்.