ஈரோடு மாவட்டத்தில் அக்.29, 30ல் 7வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாட்கள் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 1.20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு.;

Update: 2021-10-28 01:50 GMT

ஈரோடு மாவட்டத்தில் 7ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம் வெள்ளி, சனி (அக்டோபர் 29, 30) ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், 1.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முதல் தவணை தடுப்பூசி செலுபதிக் கொள்ளாத 18 வயது நிரப்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி செதுத்திய நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை தடுப்பூசி முகாமில் செலுத்திக் கொள்ளலாம்.கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள உணவுக் கட்டுப்பாடு ஏதுமில்லை, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேலையில்லை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கரோனா தடுப்பு ந.வடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News