ஈரோடு: நந்தா அலைட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் 3வது பட்டமளிப்பு விழா
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நந்தா அலைட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் 3வது பட்டமளிப்பு விழா இன்று (டிச.16) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நந்தா அலைட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் 3வது பட்டமளிப்பு விழா இன்று (டிச.16) நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஈரோடு எல்.கே.மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் எஸ்.நடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் கே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பட்டங்கள் பெறும் மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். முன்னதாக கல்லூரியின் முதல்வர் மருத்துவர் வி.மணிவண்ணன் ஆண்டு அறிக்கையினை வாசித்தார்.
பின்னர், சிறப்பு விருந்தினர் மருத்துவர் எஸ்.நடேசன் அதிக மதிப்பெண்கள் பெற்று தரவரிசையில் இடம் பெற்ற 8 மாணவர்களுக்கு தங்க பதக்கங்களையும், மற்றும் 120 மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி உரையாற்றினார்.
அப்போது, மாணவர்கள் அன்றாடம் நல்ல பழக்கங்களை விடாமுயற்சியுடன் கற்றுக் கொள்ளவேண்டும். அவை நாளடையில் ஒழுக்கமாக வடிவம் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையினை அடைய வழிவகுக்கும் என்று எடுத்துரைத்து வாழ்வில் வெற்றி பெற மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்தினைத் தெரிவித்தார்.
மேலும், இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்த மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.