பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.;

Update: 2025-03-23 04:55 GMT

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் 25வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரித் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் விழாவுக்கு தலைமை தாங்கினார்.

இவ்விழாவில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீதாராமன், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.கீதாலட்சுமி, கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 


விழாவில், 6 பேருக்கு முனைவர் பட்டம், 83 பேருக்கு முதுநிலை பட்டம், 1,379 பேருக்கு இளநிலை பட்டம் என 1,468 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் பழனிச்சாமி, தலைவர் சிவக்குமார், பேராசிரியர் அமர்கார்த்திக் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பண்ணாரி அம்மன் பள்ளிகளின் செயலாளர் முருகக்கனி உள்பட முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Similar News