சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஈரோடு மாவட்டம் சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் 18ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
Erode News , Erode Today News, Erode Live - சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் 18ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் 18ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் "பாரத் வித்யா சிரோன்மணி" டாக்டர்.வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரமேஷ் கல்லூரியின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.
இந்த விழாவிற்கு, கோயம்புத்தூர் எஸ்எஸ் வாட்ச் கேஸ் பிளான்ட், டைட்டன் கம்பெனி லிமிடெட் பியூப்பில் பர்சன், மனிதவள மேம்பாட்டு மேலாளர், பொறியாளர் ஆனந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் மாணவ மாணவியர்களாகிய இளம் பொறியாளர்களாகிய தாங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியத் தேவையான தகுதிகள் மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். பின் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.