கோபிசெட்டிபாளையம்: 15 வார்டில் திமுக சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம்
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் வீதி வீதியாக நடைபெற்றது.;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தேர்தலில், திமுக கூட்டணி கட்சியினர் 17 இடங்களில் வெற்றி பெற்றனர். இதில் திமுகவை சேர்ந்த நாகராஜ் நகராட்சி தலைவராக பதவியேற்றார். அதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் கோபி நகராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில், நடைபெற்றது.
இதனையடுத்து, 2வது நாளான நேற்று நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம் கலந்து கொண்டு, ஒவ்வொரு வார்டாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், கோபி நகர், கச்சேரிமேடு, ராம்நகர் , சீதம்மாள் காலனி, பழைய ஆஸ்பித்திரி வீதி உள்ளிட்ட இடங்களில் அந்தந்த வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுடன் சென்று நன்றி தெரிவித்தார்.