சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச விழா வியாழக்கிழமை (இன்று) கொடியேற்றத்துடன் துவங்கியது.;
சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா வியாழக்கிழமை (இன்று) கொடியேற்றத்துடன் துவங்கியது.
கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட புனித ஸ்தலமான ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் இந்தாண்டு தைப்பூச தேர்த் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கிய நிலையில் இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, நாளை 19ம் தேதி இரவும் பல்லக்கு சேவை நடக்கிறது. 20ம் தேதி இரவு மயில் வாகனக்காட்சி, 22ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளிமயில் வாகனக்காட்சியும் நடக்கிறது. 23ம் தேதி இரவு யானை வாகனத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருவீதியுலா; 24ம் தேதி மாலை கைலயங்கிரி வாகனக்காட்சி, இரவு காமதேனு வாகனக்காட்சி நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து, 25ம் தேதி மாலை சிறப்பு அபிஷேகம், இரவில் வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமி வசந்த திருக்கல்யாணமும் நடக்கிறது. 26ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 27ம் தேதி மாலை தேர் நிலை அடைகிறது. 28ம் தேதி இரவு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சி, 29ம் தேதி தெப்போற்சவம், பூத வாகன காட்சி நடக்கிறது.
இதனையடுத்து, 30ம் தேதி இரவு, மகாதரிசனம் நடக்கிறது. இதில் நடராஜ பெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா நடக்கிறது. 31ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் தைப்பூச விழா நிறைவடைகிறது.