அந்தியூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

அந்தியூர் அருகே கழிவுநீர் கால்வாய் முறையாக பராம்பரிப்பு செய்யாததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-17 15:30 GMT

கிராம மக்களின் போராட்டத்தால் அந்தியூர் முதல் பர்கூர் வரை செல்லும் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஆத்தப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். கறி வெட்டும் தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மீது உட்கார்ந்த கொண்டிருந்த அவர் எதிர்பாராத விதமாக 4அடி ஆழமுள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளார்.

இதையடுத்து கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் அதிகளவில் தங்கியிருந்ததால் நீரில் மூழ்கி முதியவர் நாகராஜ் உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உயிர் இழந்த முதியவர் நாகராஜன் உடலை மீட்டு அந்தியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கழிவுநீர் கால்வாயை பராமரிப்பு செய்யாததால் முதியவர் உயிரிழந்ததாக புகார் தெரிவித்து கிராம மக்கள் பர்கூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் கிராம மக்களுடன் இரண்டு மணி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து கழிவுநீர் செல்லும் கால்வாய் முறையாக பாரம்பரிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளத்தையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் மறியல் போராட்டத்தால் அந்தியூர் முதல் பர்கூர் வரை செல்லும் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News