ஈரோடு மாவட்டத்தில் குறைதீர்க்கும் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும் ஒத்தி வைக்கப்படுவதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.;

Update: 2022-01-09 08:45 GMT

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிமாக ஒத்தி வைக்கப்படுகின்றன. மேலும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் உள்பட அனைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிமாக ஒத்தி வைக்கப்படுவதாக, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News