சித்தோடு அருகே சண்டையை தடுக்க சென்றவர் மீது தாக்குதல் - ஒருவர் கைது

சித்தோடு அருகே சண்டையை தடுக்க சென்றவர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-01-12 10:15 GMT

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த சித்தோடு பேரோடு அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 32). இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த சேகர் (வயது 30) வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, சேகருககும் , வீட்டின் அருகில் வசிக்கும் சத்யா என்பவரின் தம்பி காஞ்சிக்கோவில் வெள்ளையன்காடு முத்துகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). இவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். 

இதனை தடுக்க முயன்ற பெரியசாமியை,  சக்திவேல் அருகே இருந்த செங்கலை எடுத்து தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதில் அவருக்கு தலை, முகம், மூக்கு உள்பட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மேலும் அவரது பல் உடைந்தது. தடுக்க வந்த சேகருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் பெரியசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து ஈரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News