கவுந்தப்பாடி அருகே டீ மாஸ்டர் மர்மமான முறையில் உயிரிழப்பு
கவுந்தப்பாடி அருகே டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.;
கவுந்தப்பாடி அருகே வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 65). இவர் டீக்கடையில் மாஸ்டராக பணிபுரிந்தார். இவர் தினமும் அதிகாலை வேலைக்கு சென்று விடுவார். சம்பவத்தன்று, நீண்ட நேரமாகியும் பாபு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னலின் வழியாக பார்த்தபோது பாபு இறந்து கிடந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த கவுந்தப்பாடி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.