சென்னிமலை முகாசிபிடாரியூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முகாசிபிடாரியூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (ஜன.2) நடைபெற்றது.

Update: 2025-01-03 13:15 GMT

சென்னிமலை முகாசிபிடாரியூர் ஊராட்சி பெரியார்நகரில் நடைபெற்ற காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

சென்னிமலை முகாசிபிடாரியூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (ஜன.2) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரம் முகாசிபிடாரியூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியார்நகர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதன் சர்மா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் லோகநாயகி, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 60 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News