ஈரோடு மாவட்டத்தில் 2,461 மாணவ-மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு தேர்வு
ஈரோடு மாவட்டத்தில் 15 மையங்களில் 2,461 மாணவ, மாணவியர்கள் வரும் பிப்ரவரி 27ம் தேதி ஊரக திறனாய்வு தேர்வு எழுதுகின்றனர்.;
கோப்பு படம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், நடப்பாண்டு ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவியருக்கு பள்ளி கல்வி துறை சார்பில் ஊரக திறனாய்வு தேர்வு வரும், பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தேர்வில், முதல் அதிக மதிப்பெண் பெறும், 100 மாணவ,மாணவியர் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு நான்கு ஆண்டுக்கு தலா ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள 15 மையங்களில், 2,461 மாணவ, மாணவியர் இதில் பங்கேற்க உள்ளனர்.