டி.என்.பாளையம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
டி.என்.பாளையம் அருகே வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

பைல் படம்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் நேரு வீதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் லோகநாதன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்து உள்ளார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை என கூறப்படுகிறது. மேலும் லோகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அவரை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் லோகநாதன் மனம் உடைந்து வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், லோகநாதனின் பெற்றோர், லோகநாதனை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே லோகநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.