கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-04-03 13:45 GMT

லதா

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லதா (28). இவர்களுக்கு கோகுல் என்ற மகனும், பாவனா என்ற மகளும் உள்ளனர். செல்வத்துக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக நிலையில், லதா அளுக்குளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். செல்வம் அவ்வப்போது லதாவிடம் பணத்தை பெற்றுக் கொண்டும் குடித்து வந்துள்ளார். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். ஆனால் அவர் குடிப்பழக்கத்தை விடவில்லை என கூறப்படுகிறது.

இதனால் நேற்று மீண்டும் கணவன்-மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட்து. இதனால் லதா மன வருத்தத்தில் இருந்து வந்தார்.இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது லதா வீட்டில் பேனில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, கோபிசெட்டிபாளையம் போலீசார் லதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News