நம்பியூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
நம்பியூர் அருகே வேறு பெண்ணுடன் போனில் பேசுவதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் கே.மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், மாணிக்கம் கடந்த சில நாட்களாக வேறு பெண்ணுடன் போனில் பேசி வந்துள்ளார்.
இதனை மனைவி பிருந்தா கண்டிக்கவே இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்படவே, மன முடைந்த மாணிக்கம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.