ஈரோட்டு சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென சாரல் மழை

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று திடீரென சாரல் மழை பெய்தது.;

Update: 2022-04-09 03:15 GMT
பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக 102 டிகிரி நெருங்கியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இந்தநிலையில் மாலை 5 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது. கொடுமுடி, பவானிசாகர்,  சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. 

மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் மி.மீ பின்வருமாறு:- 

கொடுமுடி - 1.0 மி.மீ 

சத்தியமங்கலம் - 4.0 மி.மீ 

பவானிசாகர் - 6.2 மி.மீ 

சென்னிமலை - 3.0 மி.மீ 

எலந்தகுட்டைமேடு - 1.8 மி.மீ 

கொடுமுடி - 1.0 மி.மீ 

குண்டேரிப்பள்ளம் - 6.4 மி.மீ 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 23.4 மி.மீ 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 1.3 மி.மீ

Tags:    

Similar News