அந்தியூரில் திடீர் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வழுக்குப்பாறை சுற்றுவட்டாரத்தில் இன்று மாலை கனத்தமழை கொட்டியது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வழுக்குப்பாறை சுற்றுவட்டாரத்தில் இன்று மாலை கனத்த மழை கொட்டியது. இதன் காரணமாக, எண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் காட்டாற்று வெள்ளம், ஏரியில் இருந்து மூலக்கடை பள்ளத்தின் வழியாக பெரிய ஏரி மற்றும் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து வெள்ள நீர் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பத்திரமாக இருக்க வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.