ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024 போட்டி: சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சாதனை
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024 போட்டியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024 போட்டியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024 என்பது இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் முக்கியமான ஹேக்கத்தான் போட்டியாகும். இப்போட்டி, நாடு முழுவதிலிருந்தும் 8,00,000க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து, நிஜ உலகச் சிக்கல்களுக்கு தீர்வுகாண ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த போட்டியில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் (பிஐடி) 11 அணிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு மாபெரும் இறுதிச்சுற்றிற்கு முன்னேறியது. இக்கல்லூரியானது புகழ்பெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024 இல் குறிப்பிடத்தக்க புதுமை மற்றும் தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்தி, பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெற்றது.
கல்லூரியின் மூன்று அணிகளான ஸ்லிதரின், என்விரோஎக்ஸ், மற்றும் எலெக் எம்பெட் இன்னோவேட்டர்ஸ் தங்களது சாதனைகளைக் கணிசமாக வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மொத்தம் ரூ.1,50,000 ரொக்கப் பரிசை வென்றனர். இச்சிறப்பான சாதனை, மாணவர்களின் புதுமையான முயற்சிகளை ஊக்குவிக்க பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி காட்டும் அர்ப்பணிப்பையும், நிஜ உலக சவால்களை திறம்பட சமாளிக்க மாணவர்களை தயார் செய்யும் ஆற்றலையும் பிரதிபலிக்கிறது.
டிசம்பர் 11 மற்றும் 12, 2024 ஆகிய நாட்களில் மென்பொருள் பிரிவில் காயத்ரி, வருண், திருமலர், மிதுன், பிரிய தர்ஷிகா, மற்றும் மொஹமத் மத்தீன் ஆகியோர் அடங்கிய ஸ்லிதரின் அணி பங்கேற்றது. பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய “பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு” என்ற பிரச்சனை அறிக்கையை திறம்பட எதிர்கொண்டு, மாணவர்கள் விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆப் புரொபஷனல் ஸ்டடீஸ் - டெக்னிக்கல் கேம்பஸ், டெல்லில் நடந்த போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
டிசம்பர் 11 முதல் 15, 2024 வரை, ஹார்டுவேர் பிரிவில் முத்துஸ்ரீ, நபீசா பாத்திமா, ஷரண்யா, தர்ஷினி, சசித்ரா மற்றும் ஜோதிகா ஆகியோர் அடங்கிய என்விரோஎக்ஸ் அணி பங்கேற்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வழங்கப்பட்ட "போக்குவரத்தின் போது மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் எஃப்எம்சிஜி பொருட்களின் அதிக வெப்பநிலை வெளிப்பாட்டைக் கண்டறிவதற்கான இரசாயனப் பட்டைகள் (மின்னணு அல்லாதவை) உருவாக்கம்" என்ற சிக்கல் அறிக்கையில் அவர்கள் பணியாற்றினர்.
இவர்களின் இப்போட்டியானது கோவையில் உள்ள ஃபோர்ஜ் இன்னோவேஷன் மற்றும் வென்ச்சர்ஸ் நோடல் மையத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில், ஏஐசிடிஈ மற்றும் எம்ஐசி வழங்கிய “மாணவர் கண்டுபிடிப்பு” சிக்கல் அறிக்கையின் கீழ் வன்பொருள் பிரிவில், நவீன், சிவசங்கர், புகழேந்தி, நவீனா, கீர்த்தனா மற்றும் சமிதா ஆகியோர் அடங்கிய எலெக் எம்பெட் இன்னோவேட்டர்ஸ் அணி ஸ்மார்ட் இனோவேஷன் போட்டியில் போட்டியிட்டனர். இப்போட்டி, காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட், விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டது.
இந்த மூன்று அணிகளும் தங்களின் புதுமையான விளக்கக்காட்சிகளால் “கூட்டு வெற்றியாளர்கள்” பட்டத்தைப் பெற்றதுடன், ஒவ்வொரு அணியும் ரூ.50,000 ரொக்கப் பரிசை வென்றன. இந்த குறிப்பிடத்தக்க வெற்றிக்கு பண்ணாரி அம்மன் தொழிற்நுட்பக் கல்லூரியின் தனித்துவமான கல்வி முறையே முக்கிய காரணமாக உள்ளது. இது மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், சிக்கல்களுக்கு தீர்வு காணும் மனோபாவத்தை வளர்ப்பதற்கும், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போன்ற மதிப்புமிக்க தேசிய தளங்களில் அவர்கள் சிறந்து விளங்குவதற்கும் வழிவகுக்கிறது.