அந்தியூர் அருகே பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவி மாயம்
அந்தியூர் அருகே பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் கேம்மியாம்பட்டி காலனியை சேர்ந்தவர் செல்வன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.இதில் மூத்த மகள் நிஷாந்தினி (வயது 15). ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.இவர் தினமும் பட்லூரில் இருந்து பஸ்சில் ஈரோட்டுக்கு வந்து பள்ளி சென்று வந்தார்.
சம்பவத்தன்று பள்ளி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.உடனே பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்த போது பள்ளி நிர்வாகம் நிஷாந்தினி காலையிலே பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர்.பின்னர் அக்கம் பக்கம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இதனையடுத்து இது குறித்து மாணவியின் பெற்றோர் வெள்ளிதிருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்