சத்தியமங்கலம் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்
சத்தியமங்கலம் அருகே பள்ளிக்கு சென்று வருவதாக, கூறிச்சென்ற மாணவி மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அருகே உள்ள கேத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவரின் மகள் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், பள்ளிக்கு சென்று வருவதாக, கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடி மாணவி கிடைக்காத நிலையில், மாணவியின் தாயார் அளித்த புகாரில் பேரில், கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.