ஈரோடு அருகே கல்லூரிக்கு சென்று மாணவி காணவில்லை : தந்தை போலீசில் புகார்
ஈரோட்டில் கல்லூரிக்கு சென்று மாணவி மாயம் வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்;
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது மகள் மோனிகா (19). இவர் அறச்சலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தினமும் இவர் கல்லூரிக்கு சொந்தமான வாகனத்தில் கல்லூரிக்கு சென்று வந்தார்.சம்பவத்தன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் மாலை கல்லூரி பஸ்சில் வரவில்லை. இதையடுத்து மாணவியின் தந்தை கல்லூரி பஸ் பொறுப்பாளரிடம் விசாரித்தார். அப்போது அவர் மாணவி தனது பெற்றோர் கல்லூரிக்கு பணம் கட்ட வந்ததாகவும், அவர்களுடன் சென்று வருவதாகவும் கூறி சென்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து மகளை காணாத அவரது தந்தை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் மாணவி கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை சண்முகம் அறச்சலூர் போலீசில் புகார் செய்தார். அதில் கல்லூரிக்கு சென்ற எனது மகள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எங்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் எனது மகளிடம் அடிக்கடி கலாட்டா செய்ததாகவும், இதை தான் பல முறை கண்டித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.