கோபிச்செட்டிப்பாளையம் அருகே 11-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

கோபிச்செட்டிப்பாளையம் அருகே 11-ம் வகுப்பு மாணவி, ஞாபக மறதி காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-18 12:30 GMT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தை  சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3-ஆம் தேதி மாணவி வீட்டில் இருக்கும் போது, மாத்திரை ஒன்றைச் சாப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த அவரின் தந்தை அந்த இது குறித்து கேட்டுள்ளார். இதற்கு மாணவி, எனக்கு சரியாக படிக்க முடியவில்லை. மறதி உள்ளது.  வாழப்பிடிக்கவில்லை என கூறிக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்று மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News