கள்ளிப்பட்டியில் நடந்த மாநில அளவிலான மராத்தான் போட்டி, ரேக்ளா பந்தயம்
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் மாநில அளவிலான மராத்தான் போட்டி மற்றும் ரேக்ளா பந்தயம் நடந்தது.;
கள்ளிப்பட்டி கலைஞர் சிலையில் அருகில் நடந்த மராத்தான் போட்டியை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்த போது எடுத்த படம்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் மாநில அளவிலான மராத்தான் போட்டி மற்றும் ரேக்ளா பந்தயம் நடந்தது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம், அந்தியூர் ஒன்றியம் மற்றும் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி மற்றும் ரேக்ளா பந்தயம் கள்ளிப்பட்டியில் இன்று (டிச.1) ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
கள்ளிப்பட்டி கலைஞர் சிலையில் நடந்த இப்போட்டியை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான மராத்தான் போட்டி கள்ளிப்பட்டி கலைஞர் சிலையில் துவங்கி, கள்ளிப்பட்டி, துறையாம்பாளையம், அத்தாணி வரை நடந்தது.
இரண்டாவதாக, 16 வயது மேற்பட்டவர்களுக்கான போட்டி கள்ளிப்பட்டி கலைஞர் சிலையில் துவங்கி, கள்ளிப்பட்டி, துறையாம்பாளையம், அத்தாணி, தோப்பூர், நகலூர், சின்னதம்பிபாளையம், வழியாக அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நடந்த ரேக்ளா பந்தயம் கள்ளிப்பட்டி கலைஞர் சிலை முதல் டி.என்.பாளையம் வரை நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்ட 700க்கும் மேற்பட்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் எம்.சிவபாலன், அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திருவெங்கடம், துணை அமைப்பாளர் அத்தாணி கே.எஸ்.பிரகாஷ் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.