கவுந்தப்பாடியில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி சிறப்பு வழிபாடு

கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவிலில் எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update: 2022-05-12 12:15 GMT

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி கவுந்தப்பாடி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில், தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, பவானி அருகே உள்ள கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் , முன்னாள் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, பொன்னுதுரை உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News