கவுந்தப்பாடியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

பவானி அடுத்த கவுந்தப்பாடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-01-07 15:00 GMT

தன்னாசிப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி ஊராட்சி வேலம்பாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட தன்னாசிப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் ஈரோடு கோழி நோய் ஆராய்ச்சி உதவி இயக்குநர் சேகர், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கோவிந்தராசு ஆகியோர் தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் திலக் , சரவணகுமார், யுவராஜ் , தனராஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை ஆய்வாளர் சித்தன் , உதவியாளர் செந்தில் குமார் மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இம்முகாமில், கால்நடைகளுக்கு சிகிச்சை , குடற்புழு நீக்கம்,ஆண்மை நீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல்,மலடு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை,சிறு அறுவை சிகிச்சை,தாது உப்பு கலவை சிறு கண்காட்சி போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் கால்நடை  தொழில்நுட்ப பயிற்சிக்கான ஆலோசனை அளிக்கப்பட்டது. முகாமில், கலந்து கொண்ட கன்றுகளில் சிறந்த கிடாரி கன்று தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் சுமார் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டன.

Tags:    

Similar News