எம்பி தத்தெடுப்பு திட்டத்தின் கீழ், ஒரிச்சேரி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்
பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரிச்சேரி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாமில் எம்பி சுப்பராயன் பங்கேற்றார்.
பவானி ஒன்றியத்தில் பின் தங்கிய பகுதியாக உள்ள ஒரிச்சேரி ஊராட்சியை ஒன்றிய அரசின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஓராண்டு திட்டத்தில் 2023-2024 ஆண்டுக்கான தத்து எடுக்கும் நிகழ்வு இன்று ஒரிச்சேரி புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தலைமையேற்றார். மாவட்ட ஊராட்சிகுழு தலைவர், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஆரம்ப சுகாதார பிரிவு மருத்துவர், நடுநிலை பள்ளி தலைமையாசிரியர், சிபிஐ வடக்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், பவானி நகர செயலாளர் பாலமுருகன், பவானி ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்டகுழு உறுப்பினர்கள் சந்திரசேகர், சிவராமன், நகர துணை செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயனிடம் குறைகள் குறித்த மனு அளித்தனர். அதனை உடனடியாக கவனித்து தீர்வு கான வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.