ஈரோட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சிறப்பு கடன் மேளா
ஈரோட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வரும் 19ம் தேதி தொடங்கி செப்.6ம் தேதி வரை நடக்கிறது.
ஈரோட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வரும் 19ம் தேதி தொடங்கி செப்.6ம் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
ஈரோடு பெரியார் நகர், 80 அடி சாலை சிதம்பரம் காலனி, சி.எஸ். செங்கோட்டையா காம்ப்ளக்ஸ் 2ம் தளம் செயல்படும் ஈரோடு கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வரும் 19ம் தேதி முதல் செப்.6ம் தேதி வரை நடைபெறுகிறது.
இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் எங்கள் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மூலதனமானியங்கள் புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுகட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்.
இந்த அரியவாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகைதந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானியசேவைகளை பயன்படுத்திகொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு 0424-2262080, 94443-96849, 94443-96814 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.