கீழ்வாணி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்: ஆர்வமுடன் மக்கள் பங்கேற்பு

கீழ்வாணி ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Update: 2022-04-24 07:45 GMT
சென்னிமலைகவுண்டன்புதூர் பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

அந்தியூர் அடுத்த கீழ்வாணி ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, சென்னிமலைகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் செல்விநடராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் பிரபாகரன் வரவேற்றார். 


தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், நீடித்த வளர்ச்சி இலக்குகளாக கிராம ஊராட்சி வறுமை ஒழிப்பு, ஊராட்சிகளில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நலவாழ்வு வாழ்தல், அனைத்து குழந்தைகளும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வது குறித்து விவாதிக்கப்பட்டது. 


பின்னர், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துதல் உட்பட 12 நீடித்த வளர்ச்சி தொடர்பான பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்றனர். இக்கூட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News