ஈரோடு மாவட்டத்தில் ரயத்து நிறுத்தம் செய்யப்பட்ட 38 ஆயிரம் இனங்களுக்கு சிறப்பு முகாம்!
ஈரோடு மாவட்டத்தில் ரயத்து நிறுத்தம் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 38 ஆயிரம் இனங்களுக்கு சிறப்பு முகாம், 2வது முறையாக நடத்தப்பட உள்ளது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் நத்தம், நகர நில அளவை கிராம ஆவணங்களில் 'ரயத்து நிறுத்தப்பட்டது' என பதிவு செய்யப் பட்ட ரயத்து மனை, ரயத்து நஞ்சை, ரயத்து புஞ்சை இனங்களுக்கு விசாரணை மற்றும் ஆவணங்களின் படி பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு முகாம்கள், தாசில்தார் மற்றும் தனி தாசில்தார் தலைமையில் கடந்த 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. தற்போது 38,025 இனங்கள் நிலுவையில் உள்ளது. இந்நிலங்களுக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்ற 30ம் தேதி வரை மனுக்கள் பெற முகாம் நடக்கிறது. ஈரோடு கிழக்கு உள்வட்டத்துக்கு மாணிக்கம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம், சூரம்பட்டி நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், காசிபாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வருகின்ற 20 மற்றும் 27ம் தேதி முகாம் நடக்கிறது.
ஈரோடு மேற்கு உள்வட்டத்துக்கு வில்லரசம்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம், புத்தூர் புதுப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம், நசியனூர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வருகின்ற 21 மற்றும் 28ம் தேதியும், ஈரோடு வடக்கு உள் வட்டத்துக்கு காலிங்கராயன்பாளையம் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சர்க்கார் பெரிய அக்ரஹாரம் வி.ஏ.ஓ., அலு வலகத்தில் வருகின்ற 22ம் தேதி மற்றும், 29ம் தேதி முகாம் நடக்க உள்ளது.
மொடக்குறிச்சி உள்வட்டத்துக்கு மொடக்குறிச்சி நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், எழுமாத்தூர் வி.ஏ.ஓ., அலுவல கம், நஞ்சை ஊத்துக்குளி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் 20 மற்றும் 27ம் தேதிகளிலும், அவல்பூந்துறை உள்வட்டத்துக்கு அவல்பூந்துறை நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கஸ்பாபேட்டை வி.ஏ.ஓ., அலுவலகம், புதூர் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் 21ம் தேதி மற்றும் 28ல் முகாம் நடக்க உள்ளது. அரச்சலூர் உள்வட்டத்துக்கு அரச்சலூர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், விளக்கேத்தி, முகாசி அனுமன்பள்ளியில் வரும் 22 மற்றும் 29ம் தேதி முகாம் நடக்க உள்ளது.
கொடுமுடி உள்வட்டம் வெங்கம்பூர் வி.ஏ.ஓ., அலுவலகம், கொடுமுடி நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், எழுநூத்திமங்க லம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வரும் 20, 27ம் தேதிகளிலும், கிளாம்பாடி உள்வட்டத்தில் ஊஞ்சலூர் வி.ஏ.ஓ., அலு வலகம், புஞ்சை கொளா நல்லி வி.ஏ.ஓ., அலுவலகம்,புஞ்சை கிளாம்பாடி நில வருவாய் ஆய்வாளர் அலு வலகத்தில் 21 மற்றும் 28ம் தேதிகளில் முகாம் நடக்க உள்ளது.
இதேபோல சிவகிரி நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கொல்லன்கோவில் வி.ஏ.ஓ., அலுவலகம், அஞ்சூர் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வரும் 22ம் தேதி மற்றும் 29ம் தேதியும், சென்னிமலை உள்வட்டம் சென்னிமலை நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் 20ம் தேதி 22, 27, 29 ஆகிய தேதிகளில் முகாம் நடக்க உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.