ஈரோடு மாவட்டத்தில் தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகைக்காக ஈரோட்டில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.;
ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். பொதுவாக பண்டிகை காலம் என்பதால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து சொந்த ஊர் செல்ல மக்கள் தொடங்கியுள்ளனர். இவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. மதுரை, திருச்சி, சேலம் போன்ற வெளி மாவட்டங்களுக்கு அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று இரவு கூட்டம் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில் இன்று மதியம் முதல் தொடர்ந்து 3 நாளைக்கு சிறப்பு பஸ்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் நெல்லை, கோவை, சென்னை போன்ற ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இரவு முதல் அதிகாலை வரை விடிய, விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்பட்டால் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.