ஈரோடு மாவட்டத்தில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு செயலி மூலம் 264 புகார்

ஈரோடு மாவட்டத்தில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு செயலி மூலம் இதுவரை 264 புகார் பெறப்பட்டுள்ளன.;

Update: 2025-03-12 00:20 GMT

ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு செயலி மூலம் 264 புகார் பெறப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் மது நடமாட்டம், போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு (டிரக் பிரீ டிஎன்) என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த செயலியை செல்போன்களில் பதிவிறக்கம் செய்து போதைப் பொருட்கள் நடமாட்டம் தொடர்பான புகார்களை உடனடியாக பதிவு செய்யலாம். பதிவு செய்யும் புகார்களை விசாரணை நடத்த ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கண்காணிப்பு அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். புகார்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது.

அந்தவகையில், இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 264 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதுதொடர்பான நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றன. செயலி மூலம் போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பான புகார்கள் தெரிவிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்.

எனவே பொதுமக்கள், மாணவ- மாணவிகள் தங்கள் புகார்களை அச்சமின்றி தெரிவிக்கலாம். மேலும், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை https://admin.drugfree-tn.com/ என்ற இணையதளத்தில் வெளிப்படையாக தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News