பவானி அருகே அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு
பவானி அருகே காளிங்கராயன் பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த பாம்பினை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.;
அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த பாம்பை லாவகமாக மீட்ட பவானி தீயணைப்பு வீரர்கள்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் பூந்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதை சுத்தம் செய்வதற்காக ராஜ்குமார் என்பவர் தொட்டியை நகர்த்தியபோது பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பவானி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி கொண்டு 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு பாம்பை லாவகமாக பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் விட்டுச் சென்றனர்.
மேலும் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு உள்ள புதரில் இருந்து மாடி படிக்கட்டுகள் வழியாக பாம்பு வந்திருக்கக்கூடும் என தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வீட்டின் முன்பு உள்ள பகுதிகளை சுத்தம் செய்து பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி சென்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த பாம்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.