அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் விற்ற நபர் கைது
அந்தியூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சாராயத்தை கடத்தி விற்பனை செய்ய கொண்டு சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட பெருமாள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் சிலர் சாராய விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் தொடர்ந்து வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை கிட்டம்பட்டி என்ற இடத்தில் நடந்த வாகன சோதனையின்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், சேலம் மாவட்டம் கொளத்தூர் ராமன்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மகன் பெருமாள் (வயது 35) என்பவர் பாலமலையில் இருந்து சாராயத்தை கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து பெருமாளை கைது செய்த வெள்ளித்திருப்பூர் போலீசார் அவரிடம் இருந்து 3 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.