பவானி நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக சிந்தூரி இளங்கோவன் போட்டி
பவானி நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக சிந்தூரி இளங்கோவன் போட்டியிடுவதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.;
தமிழகம் முழுவதும் போட்டியிடவுள்ள நகராட்சி வேட்பாளர்களை திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது, அதன்படி ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக சிந்தூரி இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இவர் பவானி நகராட்சியின் 24-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் அதிமுக , பாமக வேட்பாளர்களை தோற்கடித்தார்.