அந்தியூர்: சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

அந்தியூர் சுற்று வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-01-24 14:15 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்தில் உட்பட்ட பகுதிகளில் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார்,  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த, அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்கிற துரையன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து, 10 ஜெட் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், அந்தியூர் காலனி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பழனிச்சாமி (வயது 51) மற்றும் நாகராஜ் ( வயது 63) என்பவரையும் கைது செய்து, இருவரிடம் இருந்தும் 16 மது பாட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், அந்தியூர் சின்னபருவாச்சி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சிவகுமார் (வயது 47) என்பவரை கைது செய்து,  8  பிராந்தி பாட்டில்களையும், அந்தியூர் சிவசக்திநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் ( வயது 51) என்பவர் மது விற்பனையில் ஈடுபட்தாக கைது செய்து, அவரிடம் இருந்து 08 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இன்று ஒரேநாளில் சட்டவிரோதமாக மது விற்பனை ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்து 42 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News