பவானி அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
ஈரோடு மாவட்டம் பவானி அருகே தமிழக அரசின் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபரை கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட பெருமாள்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கல்பாவி, கந்தம்பாளையம் பகுதியில் அதிக விலைக்கு சரக்கு விற்பனை செய்யப்படுவதாக, பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் கந்தம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையில், கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பெருமாள் (வயது 39) என்பது தெரியவந்தது. அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.