அந்தியூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

அந்தியூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-01-22 15:00 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்,  முதல்நிலை காவலர் ராஜா மற்றும் ராஜேஷ் ஆகியோர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னபருவாச்சி பகுதியில் சந்தேகப்படும் படியாக ஒருவர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.

போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சின்னபருவாச்சி செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த மாரசாமி கவுண்டர் (வயது 49) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News