கோபிச்செட்டிப்பாளையம் அருகே கள்ளச்சாராயம் பறிமுதல்
கோபிச்செட்டிப்பாளையம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.;
கோபிச்செட்டிப்பாளையம் பெரியார் நகர் பகுதியில், கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 50). இவர் பெரியார் நகர் கீழ்பவானி வாய்க்கால் கரையில் மூன்று லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்கு வைத்திருந்ததை அடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.